Tuesday, February 12, 2008

அன்பே.. :

கால மணித் துளிகளோடு
என் காதல் மழைத் துளிகளையும்
வீசும் தென்றல் காற்றினூடே- உலவ
விடுகிறேன்.
இந்த வெள்ளைத் தாளில்
என் சிந்தனைத்துளிகளை சிந்தவிட
ஏனோ என் மனம் விரும்புகிறது.

இதை உள்ளத்தின் உளறல் என்று
நினைப்ப தினால் எனக்கொன்றும்
கவலையில்லை......
உள்ளத்தின் உளறல் என்றாலும்
உதட்டளவில் இல்லாத
உறுதியான உச்சரிப்பு.
மலையை உடைக்கவோ! நிலவைப் பிடிக்கவோ!
என் காதலுக்குத் தெரியாது
ஆனால் உள்ளத்தை உருக்க...........
உணர்வை எழுப்ப...........
அன்பைக் கொடுக்க...........
என் காதலுக்குத் தெரியும்.

அந்த தாஜ்மஹாலின் உன்னத
உயிர்த் துடிப்பை உணர முடியும்
அந்த கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும்
காதல் நெஞ்சங்களை
எழுப்ப முடியும்...............
நேற்றைக்காகவோ! இன்றைக்காகவோ! நாளைக்காகவோ!
நான் வாழவில்லை..............

ஒரு மணித் துளி வாழ்ந்தாலும்
எனக்காக என் ஆத்மாவின்
ஆனந்தத்திற்காக வாழ்கிறேன்
என் ஆனந்தம் இந்த ரோஜாவின்
மெல்லிய இதழை விடவும்
துல்லியமானது....
எனக்கு கிடைத்த இந்த ஆனந்தம்
காதலால் வந்ததே...........

காலத்தின் மீது முற்களுக்கு
உள்ள காதலால் தானே
கடிகாரம் கூட மணித் துளிகளை
உதிர்க்கிறது.
ரோஜாச் செடியில் முற்கள் என்று
நாம் கவலைப் பட்டாலும்
கடினமான அந்த நெஞ்சத்திலும்
எவ்வளவு மென்மையுள்ளது என்பதை
ரோஜாவின் புன்னகையே விளம்பரப்படுகிறதே....

ஆம் நீ என் கண்ணில் மட்டும்பட்டிருந்தால்
பரவாயில்லை
உன் முதல் சந்திப்பு என்னை
சிந்தித்திருக்க வைத்திருக்காது..........
சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு
என் இதயத்தைத் தொட்டு
என் நெஞ்சில் நினைவையும்
சுமக்கவைத்துவிட்ட உன் பார்வை------
அந்த தாக்கத்தினால் ஏற்பட்ட புண்
என் இதயத்தில் இன்றும் வேதனையை
உண்டு பண்ணுகிறது.
இந்த வேதனை சுககமாக இருந்தாலும்
சோகமான நினைவுகளை என்னுள்
தோற்றுவித்து தாகமான என் நெஞ்சில்
திடீரென்று இன்பமான தூறலை
தூவியது சோதனை தான்
உன் சந்திப்பினால் ஏனோ
உலகம் கூட எனக்கு அடக்கம் போல்
தான் தெரிகிறதடி.