Saturday, September 26, 2009

பெண்ணே…

பெண்ணே…
பள்ளி சென்று பயின்றாய்
பின்பு பல்கலைக்கழகம் சென்றாய்
படிப்பு முடிந்து வேலை செய்தாய்!

காதல் கொண்டாய்
கல்யாணம் செய்தாய்
கரண்டி பிடித்தாய் கையில்!

குழந்தை பிறந்தது
கடமை நிறைந்தது
ஓடுகிறாய் ஓடுகிறாய்
வீட்டிலிருந்து வேலைக்கும்
வேலையிலிருந்து வீட்டிற்கும்!

இதுதான் உனது வாழ்க்கையா?
என்ன கண்டாய் இதில் நீ?
பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
நீ சாதித்ததெல்லாம் இதுதானா?

நட்பு!

நட்பு இன்பமானது
உங்களோடு நான் கொண்ட நட்பு
அரிய இன்பத்திலே துன்பமானது
துன்பத்திலும் இன்பமானது!

ஒருநாள் பார்த்து
பலநாள் பழகியதைப் போல்
பேசி சிரித்து விளையாடியது
அனைத்தும் இன்பக் கனா போல்
நெஞ்சினிலே பசு மரத்தாணியாய்!

பிரிவு என்ற கட்டத்தை நெருங்கியபோது
இதயம் கனத்து வலித்து-சுக்குநூறாய்
உடைந்துப் போனதே!

மீண்டும் எப்போது ஒன்றாக சேர்வோம்
நம் மகிழ்ச்சி என்றென்றும் நீடிக்குமா
கடந்த காலங்கள் மீண்டும் திரும்புமா
கலங்கமற்ற நட்பு நிலைத்து நிற்குமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்தக் காலத்தின் கொடுமையினை நினைக்கையிலே
இமை மூடித் திறப்பதற்குள்ளே
அனைத்துமே முடிந்துவிட்டதைப் போல்
நெஞ்சுக்குள் ஓர் உணர்வு!

மீண்டும் நினைத்துப் பார்க்கையில்
கடந்த காலத்தை அசைப்போடுகையில்
என்னையே அறியாமல்-கண்களில்
நீர் தேங்கி வழிகின்றது!

பேசிய வார்த்தைகள் சுற்றிய இடங்கள்
ஐயோ, நெஞ்சம் வலிக்கின்றதே!
மீண்டும் பார்க்கலாம் என்றாலும்
கல்லூரி வாழ்க்கை முடிந்து
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில்!

நீ எங்கே, நான் எங்கே, அவன் எங்கே?
நான்கு திசைகளுக்கும் பிரிந்துச் சென்றுவிடுவோம்
உங்கள் நட்பினிலே ஆழம் இருக்கின்றது
அதைப் பார்க்கையிலே இதயத்திலோர் ஏக்கம்!

நட்பின் மூலமேநான் சொர்க்கம் காண்கிறேன்
என்னால் இயலவில்லை
சேர்ந்துப் பழகியதை மறக்க இயலவில்லை
தவிக்கிறது நெஞ்சன் தவிக்கிறது
துன்பத்தில் மூழ்கி தவிக்கின்றது!

ஆண்களும் பெண்களும்
பேசி சிரித்துப் பழகினால் காதலா?
என்ன உலகமடா இது?
நட்பில் இத்தனை விதிமுறைகளா?

நட்பு புனிதமானது
ஆண் பெண் பேதம் பாராதது
கவலைகள் தீர்க்க வல்லது
ஜாதி, மதம், இனம் அறியாதது
எல்லைகள் கடந்து சுவாசிப்பது!

சின்ன சின்ன சண்டைகள்
முகம் சுளிக்கும் கிண்டல்கள்
வயிறு குலுங்கும் நகைச்சுவை
போட்டியோடு விளையாட்டு!

நட்பின் ஆழத்தைச் சொல்வதற்கு
எனக்கு வார்த்தைகள் அகப்படவில்லை
இதுநாள் வரை ஒன்றாக இருந்த
நண்பர்க் கூட்டம் பிரியும் வேளை!

மரத்தின் கீழே அமர்ந்து
வெட்டிக் கதைகள் பல பேசி
வகுப்புக்குச் செல்லாமல் மட்டம் போட்டு…
காலம் மாறலாம்-நமது நட்பு மாறுமா?

கல்லூரி வாழ்க்கை முடியும் வேளையிலா
நம் நட்பு தொடங்க வேண்டும்
பிரியும் காலம் நெருங்கிய போதுதானா
நாம் சேர்ந்து பழக வேண்டும்?

செய்ததெல்லாம் சரியா தவறாத் தெரியவில்லை
நடப்பதெல்லாம் நிஜமா கனவாப் புரியவில்லை
பேசியதெல்லாம் மெய்யா பொய்யா அறியவில்லை
அனைத்தையும் மறக்க நெஞ்சில் வலிமையில்லை!

இது விதியின் விளையாட்டா
அல்லது காலத்தின் கட்டளையா
இனி அனைவரும் மீண்டும்
பார்ப்போமா, பழகுவோமா, பேசுவோமா
அந்த இறைவனுக்கே வெளிச்சம்!

Thursday, September 17, 2009

நட்பிற்கு முகமில்லை

எப்போதும் கண்கள்
பார்த்துப் பேசும்
பழக்கம் எனக்கு.

முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்

உனக்கோர் முகத்தை
என் மனதில் வரைந்தது.

நீயும் எனக்கோர்
முகம் வரைந்திருப்பாய்.

நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை

நட்பு

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உறவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

Sunday, September 6, 2009

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை..

இங்கிலாந்தில் வோல்ஸ் என்கிற இடத்தில் இந்துமதத்தினை பின்பற்றும் இங்கிலாந்து வெள்ளையர்களின் முருகன் கோவிலை பலரும் அறிந்திருப்பிர்கள்.. அதே போல இத்தாலி நாட்டில் altair என்கிற இடத்தில் இந்து மதத்தினை பின்பற்றும் இத்தாலிய நாட்டினர்கள் சிலர் இணைந்து ஆரம்பத்தில்84 ம் ஆண்டளவில் ஒரு யோகாசனம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு மண்டபத்தினை அமைத்து அவர்கள் வழிபடுவதற்காக ஒரு அம்மன்சிலையை மட்டும் வைத்து சிறிய கோயிலையும் அமைத்திருந்தார்கள்..காலப்போக்கில் மன அமைதிக்காக தியானம் செய்கிற இத்தாலியர்களின் தொகையுடன் இத்தாலி மற்றும் பிரான்சில் இருக்கின்ற இந்துக்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கோயில் பற்றி கேள்விப்பட்டு வரத்தொடங்கிவிட்டார்கள்..அதனால் சிறிய கோயிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து சிலைகளும் இந்தியாவிலிருந்து சிற்பிகளும் வருவிக்கப்பட்டு அழகிய ஆனால் அளவான கோயிலாக உருப்பெற்று நிற்கிறது..அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..இன்று பிள்ளையார் சதுர்த்தி விசேட பூசை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. பிரான்சில் நான் இருக்குமிடத்திலிருந்து 250 கி.மீ தூரம் இரண்டு மணிநேரப்பயணம்..மலைப்பிரதேசத்தில் அமைதியான அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு போய் வந்தது மட்டுமில்லை உங்களிற்காக சில படங்களையும் எடுத்து வந்தேன் இங்கு இணைக்கிறேன்..

கோயிலின் முகப்பு


பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்

அங்கு பலரின் கவனத்தையும் கவர்ந்து சிறப்பாக நடனமாடிய மீனாச்சி என்கிற இத்தாலியப்பெண்மணி






Friday, September 4, 2009

Making of சைனா சிக்கன்

நாம் சிக்கன நிறைய வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம். சிக்கன்65 இதுல பிரபலம். மலேசியாவில் நண்பரொருருக்கு அங்கு சிக்கன் 96 குடுத்திருக்கிறார்கள் ( 95 நாளுக்கு வளத்திருப்பாங்களோ? ) ஆனா இந்தப்பதிவு சைனா சிக்கன் கறி பற்றியது.

இது சைனா மற்றும் ஹாங்காங்கில் சர்வசாதாரணமாக நடக்கும் செயல். நம்ம வீட்ல கோழி இறந்துபோய்விட்டால் உடனே இவங்களுக்கு போன் போட்டு வரவச்சி நல்ல ரேட்டுக்கு வித்திட்டா போச்சி!!! ( அரை விலை குடுப்பாங்கயாம் )

உங்களுக்கு உவ்வே வந்தா அதுக்கு நா பொறுப்பில்லை.

1.கடமையுணர்ச்சியில் காலையிலேயே இறந்த கோழி வாங்க புறப்படுகிறார்.

2.வீடு வீடாக சென்று இறந்த கோழிகளை சேகரிக்கிறார்.


3.ஒரு இறந்த கோழியின் விலை 1 RMB. ஆனா இங்க எல்லா வேலையையும் முடித்து விக்கும்போது 9 RMB.

4.கொண்டுவந்ததெல்லாத்தையும் இப்படி போட்டு வைப்பாங்க

5.இதுவும்

6.இறந்த கோழி இறக்கைகளை தோலிலிருந்து பிரித்தெடுக்க சுடு தண்ணீருக்குள் போட்டு வைத்து எடுத்து பிறகு உரிப்பார்கள். இதனால் தோலுக்கு சேதமில்லாமல் இறகுகளை மாத்திரம் உரிக்கலாம்.

7.இங்கயும் உரிக்கிறாங்க


8.எல்லாத்தியும் கழுவுறாங்க

9.சிக்கனுக்கு கலரிங் அடித்து செருப்போடு நிற்கும் தரையில் போடுகிறார்கள்

10.மேட்டர் ஓவர்

11. உங்களுக்கு முடியுமானவரை இந்த விடயத்தை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )

பின்னுடுபவர்களிக் வசதிக்காக - டீ, காப்பி பண்ணி பேஸ்ட் செய்யலாம்

லிப்டு..

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணு, ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில


1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.


2. அடிக்கடி சே காத்தே இல்லை அப்படின்னு சொல்லி, எங்க போச்சி காத்து அப்படின்னு நீங்க வெச்சிகிட்டு இருக்குற பர்ஸ், பை முதலியவற்றில் தேடுங்க. கூட்டம் கம்மியாவும், அடி வாங்க தெம்பு அதிகமாகவும் இருக்கும் பொழுது பக்கத்துல இருக்குறவங்க பையிலையும் காத்து இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்.


3. உள்ளே வருபவர்களை கைக்குலுக்கி, வரவேற்று நான் தான் இந்த லிப்டின் COO(Chief Operating Officer) என்று அறிமுகப்படுத்தி, உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள 100ஜ டையல் செய்யவும், அப்படின்னு சொல்லுங்க.


4. லிப்ட் போயிட்டே இருக்கும் பொழுது பூனையை போல, நாயை போல சவுண்டு வுடுங்க.


5. புதுசா உள்ள வருபவரை ஒரு மாதிரியாக பார்த்து, என்ன ஒரு மாதிரியா கெட்ட வாசனை வருதுன்னு சொல்லி, நாங்க எல்லாம் சாக்ஸை துவச்சி போடுவோமாக்குமுன்னு சொல்லுங்க.


6. ஒவ்வொரு தளத்தை லிப்ட் அடையும் பொழுதும், “லிப்டை போல சவுண்டு விட்டு, நீங்கள் நான்காம் தளத்தை அடைந்து இருக்கீங்க” அப்படின்னு சொல்லி, அந்த தளத்தின் பெருமையை எல்லாம் விளக்கலாம். முடிந்தால் அங்க இறங்க முற்படுபவரை இழுத்து பிடித்து, ஒரு டூர் கைடு போல விளக்கினால் உங்களது அன்றைய பொழுது இனிமையாக கழியும்.


7. லிப்டுகுள்ள இருக்குற போனை எடுத்து ஹலோ பெப்சி உமாவான்னு ஆரம்பிச்சி உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க.ஆனா தயவு செய்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடமுன்னு சொல்லிடாதிங்க, முடியலை அதை கேட்க கூட முடியலை.


8. என்னடா காத்தே வரலைன்னு சொல்லி அதுல இருக்குற “Stop” பட்டனை அழுத்துங்க.


9. நீங்க நிக்கிற ஏரியாவை சுத்தி ஒரு சின்ன வளையத்தை போட்டு, எங்க ஏரியா உள்ளே வராதேன்னு சொல்லுங்க.

10. உள்ளே யாருமே வராத பொழுது “டேய் அவன் தானே நீயி, உன்னைய வரவேணாமுன்னு சொன்னேனே ஏண்டா வந்த அப்படின்னு” சொல்லி அவரை உள்ள விடாதி மாதிரி ஸீன் போடுங்க.


11. லிப்டு ஒவ்வொரு தளத்துல நிக்கும் பொழுது அதை நிப்பாடி, லிப்டுல இருந்து ஓடிப்போயி தளத்துல இருக்குற ஏதையாவது ஒண்ணை தொட்டு மைபிரண்டு போல “மீ த பஸ்டுடூடூன்னு” சவுண்டு விட்டுகிட்டே லிப்டுக்குள்ள ஓடி வாங்க. இதை செய்யும் பொழுது ஒருவருக்கு மேல் இருப்பது நலம் அப்ப தான் ஒரு ரன்னிங்க ரேஸ் எபெக்டு வரும் (அப்படியே உங்க வேலை போனாலும் நீங்க மட்டும் தனியா வீட்டுக்கு போக மாட்டீங்க.).

12. லிப்டுக்குள்ள எல்லோரும் ஏறுறவரைக்கும் பொறுமையா இருந்துட்டு மூடப்போற சமயத்துல வேகமா நடந்தோ, ஓடியோ லிப்டுக்கிட்ட வாங்க. நீங்க ஏறப்போறீங்கன்னு நினைச்சு லிப்டை ஸ்டாப் பண்ணி, கதவை மூடாம இருப்பாங்க. கிட்டக்க போயிட்டு ஏப்ரல் ஃபூல்ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுங்க.

13. லிப்ட் கதவு திறந்த உடன் ஏற வருபவர்களிடம் லிப்ட் மேலே செல்வதாக இருந்தால், கீழே செல்வதாக மாற்றிச் சொல்லலாம்.

14. நீங்கள் லிப்டில் ஏறி இல்லாத ஒரு தளத்தின் பட்டனை அமுக்க சொல்லி பட்டன்கள் அருகே இருப்பவரிடம் சொல்லலாம்.

15. லிப்டில் ஏறி இது எக்மோர் போகுமா எனக் கேட்கலாம்

16. ரொம்ப கூட்டமாய் இருந்தால் ரொம்ப இருமத் தொடங்கினாலோ அல்லது வாந்தி வருவது போல் சப்தம் செய்தாலோ தாராளமாய் நிற்க இடம் கிடைக்கும்.

17. உள்ளே வரவங்களை ஒன்னு ரெண்டு மூணுன்னு எண்ணிட்டே இருக்கலாம்.

18. யாருக்காவது போன் பண்ணி(நெட்வொர்க் இல்லாட்டாலும்)..”மாப்ளே,. இந்த லிப்ட்ல குண்டு வெடிக்க 1 நிமிஷம்தான் இருக்கு”ன்னு கிலி ஏற்படுத்தலாம்..

19. லிப்ட்ல நிறைய பேரு இருக்கும்போது நின்ன இடத்துலயே ஓட ஆரம்பிங்க. கேட்டா “ஜாக்கிங் கூட பண்ணமுடியாத அளவு இன்னிக்கு பிஸி”-னு ஃபில்ம் காட்டலாம்.

20. நெறய மாடிகள் இருக்கிற இடம்னா கூட இருக்கவங்ககிட்ட “இப்படித்தான் என் ஃபிரண்ட் இதே லிப்ட்ல போயிருக்கான்; ரிப்பேராயி பாதி வழில லிப்ட் நின்னுபோயி ஃபையர் இஞ்சின் காரங்க வந்து எல்லாரையும் காப்பாத்திட்டு இருக்கும்போது திடீர்னு லிப்டடு கயிறு அறுந்து போயி …. என்னமோ போங்க, அவன் நல்லநேரம் கை ரெண்டும் போனதோட தப்பிச்சிட்டான்”-னு சொல்லலாம்.

21. கூட இருப்பவர்கள் அவசரத்தில் இருக்கும்போது, செல்பேசியில் ‘மச்சி, என்னா பார்க்கிங் லாட் வந்துட்டியா ? என்ன இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகுமா … சரி … சரி .. வா’ என்றுவிட்டு லிப்டை நிறுத்தி வைத்து எல்லோரையும் பார்த்து ஜெண்டில்மேன் புன்னகையோடு ‘இதோ என் ஃப்ரண்டு வந்துட்டே இருக்கான்’, ‘இன்னும் அஞ்சே நிமிஷம்தான்’, ‘இந்நேரம் பார்க்கிங் லாட்ல இருந்து ஆஃபீஸ் பில்டிங் உள்ள வந்துருப்பான்’, ‘ஒடி வந்துட்டு இருப்பான்’, என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.

22. உள்ளே ஒவ்வொருவராக நுழையும்போது ‘அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் உள்ளே நுழையவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறுவோர், உயிரியல் ஆயுத பிரயோகத்திற்கான தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என்று அறிவிக்கலாம்.

23. தங்கள் தளம் வரும்வரை மற்றவர்களை இழுத்து வைத்து “சாட் பூட் த்ரீ” விளையாடிக்கொண்டிருக்கலாம். (ரம்மி, மங்காத்தா என்று என்று இன்னும் விஸ்தரித்துக்கொண்டும் போகலாம், வரவேற்புக்குத்தக)

24. யாராவது அவங்க fலோர் நம்பர் அமுக்க சொன்னா, அமுக்குறமாதிரி/தேடறமாதிரி பாசாங்கு செய்யலாம், அவங்க fலோர் கடந்து போற வரைக்கும். இது அதிவேக லிப்டுக்கு மட்டும்.

25. வெளியே போறவங்களுக்கு வழி விட்ற மாதிரி பாசாங்கு பண்ணிகிட்டே, கபடி ஆடலாம். அவங்க புடிச்சு தள்ளிவிட்டு, மேலே ஏறி போறவரைக்கும்.

Shakthi Super Star ல் பங்கேற்கப் போகிறிர்களா? இதோ சில பல ஆலோசனைகள்

1. உங்கள் குரல் வளத்தை நன்றாக எடை போட்டு எவ்வாறான பாடல்கள் உங்களுக்கு செட் ஆகுமென சரியாக மதிப்பிட்டு வைத்திருங்கள்.
2. ARRahman , இளையராஜா போன்றவர்களின் பாடல்களை தவிர்த்தல் நலம். எனெனில் இவர்கள் அழகிய சிறு அசைவுகளை கொண்டுவர அதிகமாக கறுப்புக்கட்டையை பயன்படுத்தி மெட்டமைத்து இசைக்கோர்ப்பு செய்பவர்கள். அதை அப்படியே மேடையில் இசையமைக்கும் குளுவினரால் கொண்டுவருவது கடினம். மற்றும் இசைக்கோர்ப்பில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வடிவமைத்திருப்பார்கள். இலகுவில் அந்த இசையை மேடையில் வாசிப்பது கடினமே. இதனால் நீங்க எவ்வளவு நல்லா பாடினாலும் உங்க திறமை சரியாக வெளிவராமல் போக வாய்ப்புண்டு.
ஹரீஷ், விஜய் ஆன்டனி, தேவா, வித்யாசாகர் போன்றவர்களின் பாடல்களை மேடையில் இலகுவாக வாசிக்கலாம். பெரிய குரல் அசைவுகளும் இருக்காது.
யுவன், ஜோஷ்வா, பிரகாஷ் இதில் ரெண்டும்கெட்டான். சிலபாடல்களை தெரிவுசெய்து பாடினீர்களெனில் ஓகே.
3. நடுவராக வருபவரின் பாடல்களை தவிர்த்தல் நலம். முதல் காரணம் நீங்க அவர பார்த்து சிரித்து வணக்கம் சொல்றது அவருக்கு ஐஸ் வைக்கத்தான்னு அவங்க நினைத்தால் நீங்க எப்படி நல்லா பாடினாலும் எடுபடாது.
அவங்க பாட்டை அவங்கதான் அக்குவேறு ஆணிவேறாக தெரிந்துவைத்திருப்பார்கள். நீங்க எப்படி பாடினாலும் சின்ன சறுக்கலை கண்டாலும் அவங்க பாட்டை கடிச்சு குதர்ற மாதிரி அவங்களுக்கு பட்டால்…. அவ்வளவுதான். ( காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு )
4. பாடும்போது சின்ன சின்ன டக்குனு இருக்கறமாதிரி சின்ன மேனரிசங்களை பண்ணணும். அதுக்காக காக்கா வலிப்பு வந்தமாதிரி ஒரே பண்ணக்கூடாது. சில தேவையான நேரத்தில் மட்டுமே. அடுத்து அட்டேன்சனில் நின்னு பாடக்கூடாது. வெகு வெகு இயல்பாக நின்னு அல்லது இருந்து பாடுங்க. பாக்கறவங்களுக்கு நீங்கதான் பாட்டுக்கு சொந்தக்காரர் மாதிரி அனுபவிச்சு பாடரதா தெரியணும். முடிஞ்சா கொஞ்சம் அப்பாவி ஃபீலிங்கை முகத்தில் கொண்டுவர ட்ரை பண்ணுங்க.
ஆண் போட்டியாளரெனில் கண்ணை மூடி பாடிக்கொண்டு டக்கென கழுத்தோடு தலையை சைட்லயோ முன்னாலயோ இழுத்து பாடலுக்குள் நீங்க இருக்கறதா ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தலாம். பெண் போட்டியாளரெனில் கண்ண மூடிக்கொண்டு மேலே சொன்ன ஐடியாவோடு சற்று இடுப்பசைத்து, கையை நன்றாக பொத்திப்பிடித்து சற்று மேலே, கீழே, சைட்ல என சின்ன சின்ன முவ்மென்ட்ஸ் பண்ணலாம். கண்ண திறந்து பாடறீங்கனா, நாடியோடு தலையை கீழே சரித்து பாடும் அதே நொடியில் கண்களை மேலே நன்றாக உயர்த்தி லெப்ஃட் றைட்டாக அசைக்கலாம். நீங்க கண்மை பாவிப்பவராயின் இது நல்லா வேர்க்கவுட்டாகும். ஆண்கள் கண்ண திறந்து பாடுவதை தவிர்க்கவும். ( அப்பதா மத்தவங்க சிரிக்கறது தெரியாது ) . இப்படி பாடலுக்குள் நீங்க இருக்கறதா ஒரு ஃபீலிங்கை ஏற்படுத்தணும்.
மேடைக்கு அருகில் வந்ததும் ஒருதரம் மேடையை குனிஞ்சு தொட்டு கும்பிடுவதுபோல ஒரு வேலை பண்ணணும். இதெல்லாம் டக்குனு பார்வையாளரையும் நடுவரையும் ஈர்க்கும்.
5. நிகழ்ச்சி நடத்துபவரோடு முடிந்தளவு தன்னடக்கத்தோடு பேசுங்கள். சில பெரிய இசை வித்துவான்களைப்பற்றி தெரிந்து கொண்டு அவ்வப்போடு டைமிங்ல அவங்களப்பத்தி எடுத்து விடணும். அதுக்காக பெரிய விடயம் தெரிந்தவர்களது மேடையில் நின்று அப்படி சொல்லக்கூடாது. அடடா இவனுக்கு இவரப்பத்தி தெரிஞ்சிருக்கேனு பரவசப்பட்டு இன்னும் டீப்பா அவங்களப்பத்தி கேட்டாங்கனா தெலைந்தீர்கள். பார்க்க கொளுக் மொளுக்கென வலிப்பு வந்தாமாதிரி எப்பவும் ஆக்சன் சொல்லிட்டே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களாக பார்த்து இருந்தால் மட்டும் இந்த டெக்னிக்கை எடுத்து விடவும்.
6. எந்தக்கேள்விக்கும் டக்கு டக்குனு பதில் சொல்லக்கூடாது. றஃமானோட பேட்டிகளை பாத்திருக்கீங்களா? ஹரீசின் பேட்டிகளை பார்த்திருக்கீங்களா ? எந்தக் கேள்விக்கும் கொஞ்சம் யோச்சிட்டுத்தான் பதில் சொல்லுவாங்க. எதையும் டப்பனு கவுத்தமா சொன்னமானு இல்லாம ஆறுதலா யோசிச்சு என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து தெளிவாக பேசுவார்கள். பார்க்கவே மேதைகள் மாதிரி இருக்கும். இதேமாதிரித்தான் நீங்களும் ரியாக்சன் குடுக்கணும். இவ்வளவு ஏன் நம்ம டாக்டர் இளையதளபதி கூட பேட்டில கேள்வி கேட்டா ஆட்காட்டி விரலால மூக்க ஒரு தரம் பிரஸ் பண்ணி தலையை கெளிச்சு அண்ணாந்து பார்த்துத்தான் பதில் சொல்லவாங்க. அவரே அப்படி ரியாக்சன் குடுக்கராருனா நீங்க எப்படிலாம் குடுக்கணும்???
அண்மையில் சன் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி அங்கத்தை மட்டும் பார்க்க நேர்ந்தது. அதில் பங்குபற்றிய அனைவரும் அருமையாக பாடியிருந்தார்கள். விஜய் ஆன்டனி அவர்கள்தான் நடுவர். மற்ற 2 பேரும் யாரென தெரியவில்லை. சரி, அதுல அசத்தப்போவது யார் ல வார ஓருத்தர் அடிக்கடி வந்து அட்டேன்சனில் உலகமெல்லாமிருக்கும் தமிழர்களென ஆரம்பிப்பார். அதுதா மிகவும் பிடித்திருந்தது. சிரிப்பு தாங்க முடியாமலிருந்தது.