Thursday, September 23, 2010

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.



1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள்.


2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க.


3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க.


4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள்.


5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.


6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள்.

11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

12. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியும் என்று சோதித்து பாருங்கள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்






1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

5.அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.


ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!