Sunday, January 30, 2011

திருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்





சமன்பாடு - 1
மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்.
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்.
ஆக முடிவாக என்னான்னா, மனுசனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.


சமன்பாடு - 2
ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.


சமன்பாடு - 3
பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.


ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,
ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.

ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.

அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!

Monday, January 24, 2011

ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி?



ஃபிகர்களுடனான எனது தொடர்புகள், பட்டறிவு, படிப்பறிவு, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் இதைப் படித்துப் பயன் பெறுவதாக.


ஃபிகரை கரெக்ட் செய்வது என்பது ஒரு கலை. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற சொலவடைக்கேற்றார்ப்போல் ஃபிகர் கரெக்ஷனும் பழக்கத்தின்பால் வருவதுதான்.

எவை எல்லாம் ஃபிகர்கள்?

எல்லாமே ஃபிகர்கள் தான். இதில் சின்ன ஃபிகர், பெரிய ஃபிகர், ஃபேன்சி ஃபிகர் என்றெல்லாம் பிரிவினை செய்யக்கூடாது. எல்லா ஃபிகரையும் கரெக்ட் செய்து வைத்துக் கொண்டால்தான் கடைசியில் உதவும்.

ஃபிகரை கரெக்ட் செய்ய வேண்டுமா? மடக்க வேண்டுமா?

ஃபிகரை நிச்சயமாக கரெக்ட் தான் செய்ய வேண்டும். மடக்க நினைக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கரெக்ட் செய்துவிட்டால் தானாகவே நம் வழிக்கு வந்து விடும்.

சரி. இனிமேல் கரெக்ட் செய்யும் வழி முறைகளைப் பார்ப்போம்.


1. நீங்கள் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு ஃபிகர் மட்டும் உங்களை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்?

அந்த ஃபிகரை கரெக்ட் செய்வதிலேயே உங்கள் கவனத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருந்தால், சாரி, உங்கள் அணுகுமுறை தவறு.

அதை அப்படியே விட்டு விட்டு மற்றவற்றை சற்று நோக்குங்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு நல்ல 'லீட்' கிடைக்கலாம். இதன் மூலம் நாம் கரெக்ட் செய்ய நினைக்கும் ஃபிகர் தானாகவே சரியாகிவிடும்.


2. ஃபிகர்களை கரெக்ட் செய்வதில் சில குழப்ப நிலைகள்.

ஒரு சில ஃபிகர்கள் மேலுக்கு சரியானது போலவும், பிரச்சனை எதுவும் இல்லாதது போலவும் இருக்கும். ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால் நமக்குத் தேவையான ஃபிகருடனான பிரச்சனைக்கு இது போன்றவைதான் காரணம் என்று தெரிய வரும். ஆகவே இவைகளின் மீதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்தது ஃபேன்சி ஃபிகர்கள். பார்க்கும்போதே நன்றாக இருக்கும் இந்த வகை ஃபிகர்கள் நம் கவனத்தை திசை திருப்பி விடக் கூடும். ஆகவே இவற்றையும் சற்று கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.


ஃபிகர்களை மெய்ண்டெய்ன் செய்யும் முறைகள்.

இப்படியாக கஷ்டப்பட்டு ஃபிகர்களை கரெக்ட் செய்வதோடு முடிந்து விடுவதில்லை. அவற்றை சரியாக மெய்ண்டெய்ன் செய்யாவிட்டால் நாம் பட்ட கஷ்டங்களெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகிவிடும்.

நம்மைத் தவிர நம்மைச் சுற்றியுள்ளவர்களும் ஃபிகர்களுடன் சம்பந்தப் படலாம். அப்போதெல்லாம் நாமும் சற்று கவனமுடன் அவர்களின் நடவடிக்கைகளை ஃபாலோ செய்தாலே போதும். இத்தகைய சங்கடங்களை நீக்கி விடலாம்.


மேலும் எல்லா ஃபிகர்களையும் அடிக்கடி ரிவியூ அதாவது திரும்பத்திரும்ப பார்த்துக் கொள்ளவேண்டும்.


மேலே சொன்னவைகளெல்லாம் அடிப்படைகள்தான். சொல்லித் தெரிவதில்லை சில கலைகள். ஆகவே, கோடிட்டுக் காட்டிவிட்டேன். ரோடு போடுவதோ, பாலம் கட்டுவதோ உங்கள் சாமர்த்தியம்.


மேலதிக தகவல்களுக்கும், விளக்கங்களுக்கும் பின்னூட்டமிடுங்கள்.

வாழ்க வளமுடன் ! ! !

Tuesday, January 18, 2011

'செல்' பேசும் வார்த்தைகள்!


(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)


ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.)


செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பரை "பொண்டாட்டி'ன்னு ஸ்டோர் பண்ணி வைச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா.. "


"செல்லம் தூங்கிட்டியாடா?''


அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம தூர்தர்ஷன்ல ஹிந்தி மெகா சீரியலாடி பாத்துக்கிட்டிருப்பாங்க! ஆஹா பதில் அனுப்பத் தொடங்கிட்டான்டா! "


"ஆமா செல்லம்! இப்பத்தான் தூங்கினேன். கனவுல நீதான் வந்த! ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்''


டேய் சத்தியமா சொல்லு. உன் கனவுல அவளாடா வந்தா! கடலை முட்டாயில இருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்குன கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமிதான் வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்கு


கீய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..


பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு ஒருபடி மேல படுத்துவாளே. என்ன சொல்லியிருக்கா! "


"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?''


ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்துச்சா, மல்லிப்பூ வைச்சிருந்தியா, ஹீல்ஸ் எத்தனை அடி உயரத்துல போட்டிருந்த எல்லாம் வரிசையாக் கேளு! "


"டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த!''


டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா! ""டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நான் என்ன பண்ண?''


ஆங்..நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னாடா ரொமான்ஸ் வேண்டி கிடக்கு. அடங்குங்கடா! "


"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்மா!''


ச்சீ..தூ..எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா..அந்த இலவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னாத் தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுடுச்சின்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம். "


"யேய் புஜ்ஜூ, எனக்கு உன் பேரைச் சொன்னாத் தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!''


எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவனை விட, செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ûஸப் படைத்த மனுசன் தான் கொடியவன்'. போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல! "


"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?'' "


"உலக வங்கியில் இந்தியா வைச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?''


கடன்காரி. உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா. நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம். "


"முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்...இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்''


டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெúஸஜைத் தான நீ அனுப்புன. நடத்து. நடத்து! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!


(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு "சாட்'டை முடிக்கிறான்.)


முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி ஏதோ நோண்டுறான். ஓ...என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வைக்கப் போறானா. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலேயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதான்டா! அதுவரைக்கும் "பொண்டாட்டி' திருப்பி "சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.


(காலை பதினொரு மணி..)


அட என்னமோ குறுகுறுங்குதே...ஓ ஏதோ ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கான். அதான் என்னது... "


"இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்''


அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா "ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான். விட்டா "பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தான்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்தரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆஃப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான்போல! டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது, சோம்பேறி!


(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)


"நந்தவனத்தில் ஓர் ஆண்டி...'(ரிங்டோன் ஒலிக்கிறது.)


அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான். "


"ஹலோ..ஆங்..குட் மார்னிங் சார்..கண்டிப்பா..இன்னிக்கு கண்டிப்பா முடிச்சிரலாம் சார்..இல்ல சார்...ஆமா கொஞ்சம் பிஸிதான்..ஒரு மீட்டிங்ல இருக்கேன்... ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே.''


தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியதிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு. அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு. நானும் தூங்...


(செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது.)

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே

"ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்கு தூக்கம் போச்சே..." இப்படித்தான் எங்களில் 25 வீதமானவர்கள் அடிக்கடி பாடிக்கொண்டிருக்கிறம். ஒன்பது வீதமான ஆக்களின் நிலமை இன்னும் மோசம்...அவைக்கு எப்போதுமே நித்திராதேவியோட சண்டைதானாம். படுத்ததுதான் தாமதம் உடனே நித்திரை வந்துவிடும் அல்லது பக்கத்தில இருப்போரை வெட்டினாற்கூடத் தெரியாத மாதிரி நித்திரை கொள்பவர்களும் இருக்கிறார்கள். படுத்துப் பலமணி நேரங்களாகியும் நித்திரை வராமல் கடிகார முள்ளதிர்வதையும் இதயம் துடிக்கும் ஓசையையும் மட்டும் கேட்டுக்கொண்டு கூரையைப் பார்த்துக்கொண்டு ஆந்தைக்குப் போட்டியா விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பவர்களுமுண்டு. ஏனிந்த வேறுபாடு? தூக்கமின்மை என்பது ஒருவித வியாதியா? தூக்கமின்மைக்கு என்ன காரணம்? நல்ல நித்திரை கொள்ள என்ன செய்யலாம்?

உணவு, உடை, உறையுள், பாதுகாப்பு, அன்பு மாதிரி நிம்மதியான நித்திரையும் மனிதர்களுக்கு அவசியம்தானே? எவ்வளவு பணம் செலவளித்தும் நல்ல கட்டில் மெத்தையைத்தான் எங்களால் வாங்க முடியும். ஆனால் நல்ல தூக்கத்தை எங்க போய் வாங்கலாம்? "நல்ல நித்திரைகொண்டு கன காலமாச்சு" என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். "நல்ல நித்திரை" என்பது அவரவருடைய வசதிக்கு ஏற்ப வேறுபடும். சிலருக்கு 5 மணிநேர நித்திரையே போதும் போதுமென்றிருக்கும். சில கும்பகர்ணன்களுக்கு 10 மணிநேர நித்திரையே போதாது போலிருக்கும் (அண்ணா, என்னை மன்னிச்சுக் கொள்ளு).

"நல்லா நித்திரை தூக்கி அடிக்கிற மாதிரி இருக்கும் போய்ப்படுத்தா நித்திரை கொள்ள முடியாமல் இருக்கு. மெதுவாக் கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து நித்திரை வாற நேரம் பார்த்து முழிப்பு வந்திடும்" இப்படி அர்த்தம் இல்லாமல் பலர் புலம்புவதை யாவரும் கெட்டிருப்போம். இவர் போல் தூக்கம் வராமல் அவதிப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சில உளவியல் காரணங்களாக இருக்கலாம் அல்லது சுற்றுப்புறச்சூழல் காரணிகளாக இருக்கலாம். மனவழுத்தம், மனக்கவலை, போதைப்பழக்கம் போன்றவற்றால் அவதிப்படுவோர்தான் அதிகம் தூக்கமின்றித் தவிப்ப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இவை தவிர உடம்பில் தீராத வலியுடையோர், நுரையீரல் இரத்தப்பை சம்பந்தமான நோயுள்ளோர், இரவு நேர வேலை செய்வோர்கள், நித்திரைக்கான மாத்திரை உட்கொள்வோர்கள், அதிகம் இரைச்சலான/குளிரான/வெப்பமான இடங்களில் வசிப்போர், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவோர் மற்றும் அடிக்கடி caffeine போன்ற பதார்த்தங்களடங்கிய பானங்களை அருந்துவோர் எனப் பலர் தூக்கமின்மையால் அவதியுறுகிறார்கள்.

தூக்கமின்மை என்பது ஒரு வருத்தமன்று; மாறாக நோய் வருவதற்கான அறிகுறியாகும். தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் தூக்கம் வரும் என்று நினைப்பது தவறு. மாத்திரைகள் தூக்கம் வருவதை விரைவாக்குமே தவிர ஆழ்ந்த நித்திரையை தராது; மாறாக குறுகிய நேரத்தூக்கத்தையே அது விளைவிக்கும். அடிக்கடி முழிப்பும் வந்து போகும்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்வோர் பின்னர் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை அவதானித்திருப்பீர்கள். அடிக்கடி உட்கொள்வதால் மாத்திரைகளுக்குப் பழக்கப்பட்டுப்போன எமதுடம்பு தான் வழமையாகச் செய்யும் உதவியைக் குறைத்துக்கொள்வதால் ஆரம்பத்தில் வந்தது போல நித்திரை உடனே வராது. எப்போதாவது ஒருநாள் மாத்திரை உண்ணாது தூங்க முயன்றால் அது முடிவதில்லை.

தூக்க மாத்திரைகளை உட்கொண்டு நாளடைவில் முழுத்தூக்கத்தையும் கெடுத்துக்கொள்வதை விட நிம்மதியான நித்திரைக்கு வேறு வழிகளைத் தேடுவதே சிறந்தது. உதாரணமாக படுக்கையை நித்திரை கொள்வதற்கு மட்டும் பயன்படுத்துவது. புத்தகம் வாசித்தல், ரீவி பார்த்தல், றேடியோ கேட்டல் லாப்டாப் இல் நேரங்கழித்தல், போனில் அரட்டை அடித்தல் இவையெதற்குமே படுக்கையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நித்திரைக்குச்சென்று பத்து நிமிடங்களாகியும் உறக்கம் வரவில்லையா? படுக்கையறையை விட்டு வெளியே சென்று விருப்பமான ஒரு பாடலைக் கேட்கலாம்; சிறிது நேரம் ரீவி பார்க்கலாம்; பிடித்த புத்தகமொன்றை வாசிக்கலாம்; மீண்டும் தூக்கம் கண்களை முட்டும்போது போய்த் தூங்கலாம்.

தூங்கச்செல்ல முதல் அன்று நடந்த நல்ல விசயங்களை மட்டும் அசைமீட்டபடி ஒரு சின்னக்குளியல் போட்டுவிட்டு பால் குடிக்கலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஏதும் சாப்பிடலாம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைக்கலாம். காலையில் போடுவதற்கான ஆடைகளைத் தயார் பண்ணி வைக்கலாம்.தினமும் ஒரே நேரத்துக்கு எழும்ப வேண்டும். வார இறுதி நாட்களில் இன்னும் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று ஆசை வந்தாலும் அந்த ஆசையைப் புறக்கணித்து வாரநாட்களில் எழும்பும் நேரத்துக்கே எழும்ப வேண்டும். பகல்நேரக் குட்டித் தூக்கத்தைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்கச் செல்வதற்கு 3௪ மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே உடற்பயிற்சியை முடிக்க வேண்டும்

உணவு உட்கொள்வதற்கென ஒரு அட்டவணை போட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். இரவுச் சாப்பாட்டில் அதிகம் காரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் நண்டுக்கறி சாப்பிட்டாத்தான் நித்திரை வருமென்றால் பின்னர் பாலருந்தல் நல்லது.Nicotine & caffeine நித்திரையைக் கெடுப்பவை. நித்திரைக்குச் செல்ல முதல் caffeine உள்ளடங்கிய பானம் அருந்தவே கூடாது. ஆறு மணித்தியாலங்கள் வரை cஅffஎஇனெ இரத்தத்திலிருக்கும். சிகரட் பிடிப்பவர்கள படுக்க முதல் 2 மணித்தியாலங்களுக்கு முதல் சிகரட் பிடிக்கலாம். சிகரட்டிலுள்ள Nicotine 2 மணித்தியாலங்கள் வரை இரத்தத்திலிருக்கும்.

படுக்கப் போகும்போதுதான் உள்ள வீட்டுக்கவலை நாட்டுக்கவலை எல்லாம் வந்து கண்முன்னால் களி நடனம் புரியும். அதையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு 100 லிருந்து 1 வரைக்கும் எண்ணிக்கொண்டு அல்லது பிடிச்ச பாடல்களைக் கேட்டுக்கொண்டு.. ... .. கொர் கொர் கொர்...

Facebook பற்றிய திரைப்படம்


ஒருநாளைக்கு காலை மாலை இரவு படுக்க முதல் facebook பக்கம் போகாவிட்டால் எதையோ இழந்தது போல கொஞ்சம் தலையிடி போல மற்றும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அறிகுறிகள் எல்லாம் இருக்குதெண்டு சொன்னால் நீங்கள் facebook க்கு அடிமை என்று சின்னக் குழந்தை கூடச் சொல்லிடும். அந்தளவுக்கு சின்னப் பிள்ளைகள் முதல் 65 வயது முதியோர்கள் வரை மணித்தியாலங்களைச் செலவிடும் ஒரு தொடர்பாடல் வலையமைப்பாகி விட்டது FB.


எனக்குத் தெரிந்து 10 வயதேயான என் குட்டி மச்சான்கள் முதல் வயது போனவர்கள் என்று எல்லோரும் சந்தோசமாக FB ஐப் பயன்படுத்தி வருகிறார்கள். எனக்கும் எரிச்சல் படுத்துகின்ற கேளிக்கை விளையாட்டுகளும் மற்றைய FB Applications களும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. கோழி வளர்ப்பதும் வேலி அமைப்பதும் கத்தரிக்காய் நடுவதுமாக அவர்களுடைய பொழுது மகிழ்வாகவே கரைகிறது. யாரென்றே தெரியாத ஒருவரின் படங்கள் எல்லாம் பார்க்கக் கூடியதாக இருப்பதால் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற ஸ்காபுரோ வாசியாக இருப்பதால் தெருவில் பேருந்தில் பார்ப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாகவே தெரிகிறார்கள். எப்படி அவர்களுடைய முகம் எனக்குப் பரிச்சயமாகத் தோன்றியது என்று யோசித்துப் பார்த்தால் ஐயகோ Facebook stalking.


இந்த FB எப்படி உருவானது என்பது பற்றி சுவாரிசயமான கதையிருக்கிறது.அந்தக்கதையை வைத்து blockbuster படம் எடுக்குமளவுக்கு விசயமிருக்கிறதா என்று எனக்கும் கேள்வி வந்தது ஆனால் October 2010 ல் வெளிவரவிருக்கின்ற "The Social Network" என்ற இந்தப்படம் செக்ஸ்,பணம்,ஜீனியஸ்(அறவாளி?) மற்றும் துரோகம் பற்றியதென்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே FB ன் உரிமை பற்றி வழக்குகள் நடந்தது. அந்த வழக்குககள் பற்றிய சுவாரிசயமான விடயங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுமா என்று தெரியவில்லை.


FB ன் தந்தை என்று சொல்லப்படுகின்ற Mark Zuckerburg 25 வயதுடைய ஒரு Harvard பல்கலைக்கழக மாணவன். படித்துக்கொண்டிருக்கும்போது 2004ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி ஒரு செயற்பாட்டுக்காக நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய இந்த FB என்கின்ற சமூகத் தொடர்பாடல் வலையமைப்பு Mark Zuckerbur ஐ திடீர் பில்லியனர் ஆக்கிய பின்னர் அவர் இன்னமும் படிப்பை முடிப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு திரும்பவில்லையாம்.


இங்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் பாடசாலை முடியும் நேரம் Grade 8ல் இருந்தென்று நினைக்கிறன் Year Book என்று ஒன்று வெளியிடுவார்கள். அந்தந Year book ல் பாடசாலையில் படிக்கும் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லாற்ற படமும் போடப்படும். இந்த year book ஐத் தயாரிக்கவென்று year book committee என்று ஒரு குழு இருக்கும். அவையள் எப்பவும் கமராவும் கையுமாத் திரிவினம். பாடசாலையில பெயர்போன காதலர்கள் கர்ப்பிணியா இருக்கும் ஆசிரியர்கள் crazy hair இப்பிடி எல்லாத்தையும் சுட்டுத்தள்ளுவினம். கடைசியல year book ஐப் பார்க்க நல்லாத்தானிருக்கும். இந்தப்புத்தகத்தில தான் தங்கட தங்கட high school sweethearts எல்லாரையும் வட்டம் போட்டு வைக்கிறது இதயம் கீறி வைக்கிறது இப்பிடி நிறைய விசயங்கள் எல்லாம் நடக்கும். படிச்சி முடிஞ்சு பல வருடங்களால அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்க்க பரவசமாத்தானிருக்கும்.


ம்...அப்பிடி ஒரு yearbook ஐ ஹவார்ட் பல்கலைக்கழகத்துக்காக உருவாக்கும் முயற்சியில் முதலில் தனிய ஹவார்ட்க்கு மட்டும் உருவாக்கிப் பின்னர் Stanford, Dartmouth, Columbia, Cornell ,Yale போன்ற மற்றைய பல்கலைக்கழகங்களுக்குப் பரவி பின்னர் உலகிலுள்ள மற்றைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்களும் விரிவுரையாளர்களும் கூட பாடத்திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வலையமைப்பாகவும் இருந்தது இப்பொழுதும் இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல உயர்தரப் பாடசாலைகளில் எல்லாம் FB பரவலாகப் பாடத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். அது கூடப் பறவாயில்லை 10-12 வயசு வாலுகள் எல்லாம் FB க்கு வந்து அடிக்கிற லூட்டி தாங்க முடியல்ல.


Mark Zuckerburg தங்களுக்கு developer ஆக வேலை செய்தபோது தங்களுடைய ஐடியாவைத் திருடி FB ஐ உருவாக்கியிருக்கிறார் என்று தொடரப்பட்ட வழக்கு இறுதியில் Mark Zuckerburg 65 மில்லியன் டொடலர்கள் செலுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து யூன் 25 2008ல் முடிவுக்கு வந்ததென்பது ஆச்சர்யமான விசயம்.


350 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட இந்த சமூகத் தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பாக இன்னும் பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

Sunday, January 16, 2011

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.




1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள்.


2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க.


3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க.


4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள்.


5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.


6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும்.


7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.


8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க.


10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள்.


11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.


12. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியும் என்று சோதித்து பாருங்கள்

Saturday, January 15, 2011

பெண்ணோட கேள்விக்கென்ன பொருள்?



“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம். ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க. அது ஓரளவுக்கு உண்மைதாங்க. அவங்க என்ன நினைக்குறாங்களோ, அதை சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க. ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும், அதுக்கு பின்னணியில இருக்கிற “உண்மையான” அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1. உங்களுக்கு என்ன பிடிக்கும்? = இந்தக் கேள்வியை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம். ஆனா இந்தக்கேள்விக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா? உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது, அப்படிங்கிறதுதான் இந்த கேள்விக்கு விளக்கம்..

2 அந்த பொண்னு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல = அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா, உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம். ஆனா, அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா, அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்

3. இன்னைக்கு என்ன சமையல் பண்ணட்டும்? = இந்தக்கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது. டேய்! இன்னைக்கு உன்னைக்கேட்டுதான் சமைக்குறேன். மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது. எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும். இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்

4. உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? = இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா? உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது. உனக்கு வடிச்சு கொட்டுறதே தண்டம், இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது. இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்.

5. என்னமோ பண்ணுங்க = பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே’ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா, உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது நீயெல்லாம் திருந்தவே மாட்டே. எனக்கு இது பிடிக்கலை. இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா, மவனே தொலைச்சு கட்டிடுவேன். அப்படிங்கிறதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்.

6. எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன் = இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே. அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? எப்பபார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு. இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே? மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு. இதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்

7. நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் = அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா? உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம் ? ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?. நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு. அப்பத் தெரியும்.

8. இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது = இந்த வார்த்தையை சொன்ன உடனே, ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா? நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே. எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல, அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே. மொதல்ல இதை மாத்திட்டு நோக்கியா N 95 வாங்கிக்கொடு. அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்.

9. இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்கு = அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும். நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய், 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு. அப்படின்னுதான் அவங்க சொல்ல வர்றாங்க.

10. எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ? = உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க. அட அறிவுகெட்டவனே.. உன் வேலையுண்டு, வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே. கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுறே? அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.

11. ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு? = நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே. என்னை என்னைக்காவது அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா? - அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.

நண்பர்களே... இந்த உண்டான அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ, இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா, அதுக்கு என்ன அர்த்தம்'ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை. அதுக்குத்தான் சொன்னேன்