Friday, July 10, 2009

அன்பு ...

அன்பு ஒன்றுதான் வாழ்க்கை

அர்த்தமுள்ள வார்த்தை

அறிந்தவர்கள் மிகவும் அதிகம்

அனுபவிப்பவர்கள் மிகவும் குறைவு


அன்பை விலை பேசும்

மனிதர்களின் மத்தியில்

அதிசியமாய் விலங்கினம்

பறவையினம் ஆறுதல் தரும்

ஆறரிவு அன்புக்கு பேரழிவு


அம்மா அழுதபடி

தந்தை கோபப்பட்டு

மகளுக்கும் மகனுக்கும்

அன்பினை காதல் என்று

யார் சொல்லி தந்தது

அன்பும் காதல் என

யார் அறிய மறுத்தது


கடவுளோடு கொள்ளும் அன்பும்

காரியகார அன்பு

கடைவீதியில் விற்ப்பதில்லை

கருனையுள்ள அன்பு

கவிதையில் மட்டும்

கவனம் கொள்வதில்லை

காயமில்லா அன்பு

கண்மூடி கிடந்து

இருளையே பார்க்கும்

உயிர்களுக்கெல்லாம்

வெளிச்சம் காட்டுவதுதான்

உண்மையான அன்பு.

அன்பு ...

அன்னையின் அணைப்பில்

ஆரம்பம் அன்பு

பள்ளிப் பருவத்தில்

தோழமை அன்பு

பருவ காலத்தில்

தோழியின் அன்பு

மணம் ஆகிவிட்டால்

மனைவியின் அன்பு

மழலை பெற்று விட்டால்

மழலையின் அன்பு

அனுபவ முதிர்ச்சியில்

ஆன்மீக அன்பு

உலகம் உழரும் கோடு

அன்பு! அன்பு! அன்பு!

Tuesday, July 7, 2009

காதல்...

காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.

பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும். தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.

காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ, எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர், கிழிஞ்சு போன பஸ் டிக்கெட், லேசா செம்பட்டையான ஒரு முடி, குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள், காது போன குட்டிக் கரடி பொம்மை, ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற பீலிங் கிடைக்கும்.

இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.

* 23சி பஸ்ஸýக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்போம். 25 வயசுள்ள ஒரு பொண்ணு பஸ் வரலையேன்னு 26 வது தடவையா நகத்தைக் கடிப்பா. 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவ பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவ கைக்குப் போகும். அப்புறம் அவ டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவளுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!

*தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸôரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க. அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி அவ சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.

*நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒரு ஜந்து உங்க பின்னாலேயே வரும். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லும். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு! திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?ன்னு கேக்கும் அந்த ஜந்து. இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை.

*"எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டெüட். அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா ஆரம்பிப்பாங்க. "எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்úஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க. கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும். அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை.!

*"ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெúஸஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும். முகம் பார்க்காம பண்ணுற இந்த லவ்வுல , என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு வெலாவாரியா சொல்லாமலே தெரியுமே உங்களுக்கு!

*"மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெüட்டானது காட்று!'

- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும். "நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது.

*"டேய் மச்சான் இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்னு' பந்தாவா ஒருத்தன் முள்ளைத் தூவிட்டுப் போவான். "இந்த சுடி அவன் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா. "அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறான். நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும். "அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை.

*அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசா வேணாம். டப்பாசு வெடிச்சாத்தான் தீவாளி, கேக்குத் தின்னாத்தான் கிறித்துமஸ், பிரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான், அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க

Thursday, July 2, 2009

மனம் வருந்துதடி…

மனம் வருந்துதடி…
என் மனம் வருந்துதடி…
புனிதமான நட்பை கூட கள்ளத்தனமாய்
களவாக செய்கிறோம்…

நான் ஆண், நீ பெண் என்பது
சமூகத்திற்கடி, நட்புக்கு அல்ல…
ஆனாலும் தறிகெட்ட சமூகத்திற்கு
அஞ்சுகிறோம், மறைக்கின்றோம் எமது நட்பை…

என் வாழ்நாள் முழுதும் உனக்கென தந்தேன்
உன் வாழ்நாளை எடுத்துக் கொண்டு…
காதலை மதிக்கும் இந்த சமூகம்
நட்பை மட்டும் மிதிப்பதென்னடி…?

இதற்கெல்லாம் அஞ்ச நானொன்றும்
மூடன் இல்லையடி…
என் இதயத்தில் வீரப்பெண்
உன்னையமல்லவா தாங்குகிறேன்…

தமிழுக்கு அமுதென்று பெயர்.(?)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதொன்று அறியேன் என்றார் ‘பாரதி பித்தன்’ பாரதிதாசன்.
இதே கருத்தை இன்றைய (பெரும்பாலான) தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடமும், சினிமா தயாரிப்பாளர்களிடமும் சொல்லி பாருங்கள். அவர்கள் சொல்வார்கள், “.Bharathithasan doesn’t know the English language. That’s why he said like that. (பாரதிதாசனுக்கு ஆங்கில மொழி தெரியாது. அதனால் தான் அப்படி சொன்னார்)” என்று. நீங்கள் ‘மன்டாரின்’ மொழியில் ஏதாவது கேட்டால் கூட அவர்களுக்கு விளங்கினாலென்ன, விளங்காவிட்டாலென்ன அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிழ் சிறிது கலந்த ஆங்கிலத்தில் தான் விடையளிப்பார்கள் போலும். (கவனிக்கவும்! ஆங்கிலம் கலந்த தமிழ் வேறு, தமிழ் கலந்த ஆங்கிலம் என்பது வேறு.)
நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள் என்ற பெயரில் கிழிந்த அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் என்றால் அவர்களுக்கு அளவாக அமைய கூடிய ஆடைகளை அனுசரனையாளர்களின் அனுசரனையோடு அணிந்து கொண்டு வந்து தமிழுக்கு இவர்கள் செய்கின்ற கொடுமைகள்! சொல்லி அடங்கா!
(இவர்களின் உடைகளுக்கு அனுசரனையாளர்கள் வேறு!)
வணக்கம் and welcome to அசத்தப்போவது யாரு.
அடுத்ததாக வந்து அசத்த போறவர் Mr.கண்ணன்.
Please welcome him on stage please.
Let us have a short commercial break.
Welcome back after the short commercial break.
இன்றைக்கு எங்கட show அ நேரில பார்த்து enjoy பண்ணினீங்க. எப்பிடி feel பண்றீங்க?
இப்படி பல பல தமிழ் கொலைகள்.
மேற்படி ஆங்கில சொற்களுக்கு பிரதியீட்டு தமிழ் சொற்கள் இல்லையா? தெரியாவிட்டால் தமிழகத்திலேயே பல தமிழ் விசுவாசிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழில் கதைப்பதை பெருமையாக நினைக்கும் தொகுப்பாளினிகள் எமக்கு வேண்டும் என்று கேட்கும் நிகழ்ச்சி இயக்குனர்கள் எமக்கு வேண்டும்.
வணக்கம்! அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.
அடுத்ததாக வந்து அசத்த போகின்றவர் திரு.கண்ணன். அவரை அன்புடன் வரவேற்போம்.
ஒரு சிறிய விளம்பர இடைவேளையின் பின்னர் மீண்டும் சந்திப்போம்.
விளம்பர இடைவேளையின் பின்னர் வரவேற்கிறோம்.
எங்கள் நிகழ்ச்சியை இன்றைக்கு நேரில் பார்த்து இரசித்தீர்கள். எவ்வாறு உணர்கிறீர்கள்?
(சுத்த தமிழில் மட்டும் கதைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை அல்ல.)
இவ்வாறு கதைப்பதால் தங்கள் நிகழ்ச்சியின் தரம் குறைந்து விடும் என்று நினைக்கிறார்களா?
இது இவ்வாறு என்றால் ‘Grand master’ நிகழ்ச்சியில் இலங்கை தமிழிச்சி அணியும் வட இந்திய சாயலான உடைகளும், அவரின் தமிழ் உச்சரிப்புக்களும். இலங்கையில் சேலைகளை அப்பெண்மணிக்கு வழங்க அனுசரனையாளர்கள் யாருமே இல்லையா
திறமை இருந்தும் அவை அடிபட்டுப் போகும்படி இவர்கள் செயற்பட கூடாது என்பதே எமது கோரிக்கை. யாரையும் புண்படுத்துவது எமது நோக்கமல்ல.
ஆங்கிலம் என்பது இன்றைய நிலையில் அத்தியாவசியம் என்ற உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் அதற்காக தமிழை கொச்சைப் படுத்துவது போல தமிழ் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது பிழை என்பதே எமது கருத்து.
தமிழின் மீள் எழுச்சிக்காக ஒரு தமிழனின் ஆதங்கமே இது.