வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
No comments:
Post a Comment