Thursday, August 30, 2007

நட்பும் பகையும்

ஒரு பக்கதன் காட்டுலே ரொம்பவும் கடுமையா தவம் பண்ணிக்கிட்டிருந்தான்! கடவுள் உடனே அவனுக்கு முன்னாடி வந்து காட்சி கொடுத்தார்! கையிலே கதாயுதம் வேறே வச்சிருந்தார். “பக்தா! உன்னுடைய பக்தியை மெச்சினேன்! ஊனக்கு என்ன வரம் வேணுமோ கேள் தர்றேன்”னாரு! இப்படி சொன்னதுக்கப்புறம் பக்தன் சும்மா இருப்பானா? “பகவானே! ஏன்னுடைய முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கிற சக்திகளை உன்னுடைய கதாயுதத்தாலே தாக்கி – வீழ்த்தி – அழிச்சுடணும்! இதுதான் என்னுடைய வேண்டுகோள்!” அப்படின்னான்! பகவான் இதைக் கேட்டார். முகத்துலே புன்னகை, “அதுக்கென்ன? அப்படியே செஞ்சுடறேன்!”. ஆப்படின்னு சொல்லிப்புட்டு மறைஞ்சுட்டார். கொஞ்ச நேரம் ஆச்சு! ஆண்டவன் கையிலே இருந்த கதாயுதம் வேகமா வந்தது! வரம் கேட்டானே பக்தன், அவன் மார்பையே நோக்கி வந்து தாக்க ஆரம்பிச்சுட்டுது, அப்படியே தடுமாறி கீழே விழுந்துட்டான். இது ஏதுடா வரம் கேட்டது வம்பாப் போச்சின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டான்! “அய்யய்யோ ஆண்டவனே! ஏன்னப்பா இது? என்னுடைய முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கும் பகைவநன அல்லவா தாக்கச் சொன்னேன். நீ ஞாபகமறதியா ஏதாவது பண்ணிப்புட்டியா? உன்னுடைய கதாயுதம் என்னையே வந்து தாக்குதே! குறிகிறி தவறிப் போச்சா!” அப்படின்னு கத்த ஆரம்பிச்சுட்டான் பக்தன்! கடவுள் மறுபடியும் காட்சி கொடுத்தார். பக்தனைப் பார்த்து சொன்னார் : “பக்தா! நீ கேட்டபடிதான் நான் ஆயுதத்தை வீசினேன்! ஞாபகமறதிலாம் ஒண்ணும் கிடையாது! குறிதவறியும் அது வந்துடலே! சுரியாத்தான் வந்திருக்கு! மத்தவங்களை தாக்கணும் - வீழ்த்தணும் - அழிக்கணும்ன்னு நினைக்கிற உன் மனம்தான் உனக்குப் பகைவன் - எதிரி எல்லாம்! உன் முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கிறது நீயோதான்! அதனாலேதான் இது உன்னையே வந்து தாக்கியிருக்கு!” அப்படின்னு கடவுள் சொன்னாராம்! இதுலேயிருந்து…. நமக்கு எதிரி யார்? ஏன்கிறதை நல்லா புரிஞ்சிக்கிட்டோம் இல்லையா? நமக்கு நண்பர்கள் யார்? நுமக்கு கிடைக்கிற நண்பர்களை மூணு வகையா பிரிச்சுடலாம்! புனைமரம் - தென்னைமரம் - பாக்குமரம் இப்படி! பனைமரம் இருக்கே இதுதான் மூளைக்கும் - தானாகவே தண்ணி குடிச்சிக்கும் - தானாகவே வளரும்! நமக்கு பலன் கொடுக்கும். நமக்கு வலிய வந்து உதவி செய்யிற நண்பர்கள் இந்த ரகம்! தென்னைமரம் இருக்கே இதுக்கு எப்பவாவது தண்ணீர் விட்டா போதும்… வளர்ந்துடும்! இதுமாதிரி எப்பவாவது உதவி செஞ்சா அதை ஞாபகம் வச்சிருந்து நமக்கு உதவி செய்யிற நண்பர்கள் தென்னைமரம் மாதிரி! பாக்கு மரம் இருக்கே இதுக்கு தினமும் தண்ணீர் விட்டாத்தான் வளரும், பலன் கொடுக்கும்! இதுமாதிரி தினமும் உதவி செஞ்சாத்தான் நம்மை கவனிக்கிற நண்பர்கள் உண்டு! இவங்களையெல்லாம் பாக்கு மரம் மாதிரி! ஆக நண்பர்களை இந்த வகையிலே அடையாளம் கண்டுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும்! ஆனா……. இந்த காலத்தோட கோலம் எப்படின்னா…… நா நல்லதுன்னு நினைச்சி இன்னொருத்தருக்கு உதவி செஞ்சாக்கூட உபத்திரவத்துலே மாட்டிக்கிறாப்புலே ஆயிடுது! ஒருத்தர் வந்தார்……. “சார்! ஆத்து வெள்ளத்துலே நான் தத்தளிச்சிக்கிட்டு இருந்தப்ப என்னைக் காப்பத்தினது நீங்கதானா சார்!” ன்னு கேட்டார். அதுக்கு இவரு சொன்னார் : “ஆமாம்! அதனாலே என்னப்பா? அது என் கடமை இதுக்குப்போய் நன்றியெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லே”ன்னார். இதுக்கு இந்த ஆளு : “அதுக்கில்லே சார்! சட்டைப்பையிலே ஒரு 25 காசு வச்சிருந்தேன்! அதை காணோம்! அதுக்காகத்தான் கேட்டேன்”னாராம்! இது எப்படி?

No comments: