Saturday, September 1, 2007

தோழமை.

சில கவிதையின்


கடைசிவரியில்


ஒட்டியிருக்கும்


உயிரைப்போல


எதை எதையோ


பிதற்றிய


உன் கடிதத்தின்


இறுதிவரிசொன்னது


என்னை- நீ


நேசிப்பதாய்!




கடிதம் எழுதக்கூட


வார்த்தை


கடன் வாங்கியிருந்தாயா?


எந்தச் சொல்லிலும்


உன்


சொந்த உணர்வுகளில்லை.




பூக்களுக்கு


முலாம் பூசுவதுமாதிரி


இதயத்தில்


பொறுந்தவேயில்லையடா


உன் கடிதம்.




எப்போதுமே


மதிக்கிறேன்


உன் அறிவுத் திறமையை




எப்போதும்


கடமைப்பட்டிருக்கிறேன்


நீ செய்த உதவிகளுக்கு.




நீ


என்னைச் செதுக்கினாய்


அந்த உரசலில்


ஒருபோதும்


என்னுள்


தீ மூண்டதில்லை.




தெரிந்துகொள் தோழனே


இது தோழமை.




ஆத்மாவை


அலங்கரித்துக் கொடுத்த


உன்னோடு


உடை களையும் உறவு


கொச்சையாகும்.




அதனால்


மறுப்பதற்கு மன்னிக்கவும்.




நண்பனே


நட்புஸ்தானம் பெற்று


உடனே வா


தொடருவோம் தோழமையை.......

1 comment:

சினேகிதி said...

ரொம்பவும் பிடிச்சிருக்கு!