எப்போதும் கண்கள்
பார்த்துப் பேசும்
பழக்கம் எனக்கு.
முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்
உனக்கோர் முகத்தை
என் மனதில் வரைந்தது.
நீயும் எனக்கோர்
முகம் வரைந்திருப்பாய்.
நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.
உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை
No comments:
Post a Comment