மதங்களை காதலி
தீவிரவாதியாகதே!
ஜாதியைக் காதலி (ஆண், பெண்)
வெறிக் கொள்ளாதே!
நிறத்தைக் காதலி - அதில்
உயர்வுத் தாழ்வு காணாதே!
மண்ணைக் காதலி - அதற்காக
உறவைப் பகைக்கொள்ளாதே!
நாட்டைக் காதலி - நாட்டை
இழி நிலைக்குத் தள்ளாதே!
இயற்கையைக் காதலி - அதை
அழிக்க நினைக்காதே!
தாயைக் காதலி
காரியவாதி யாகாதே!
தந்தையைக் காதலி
பணப்பையை பார்க்காதே!
உடன்பிறப்பைக் காதலி - அவர்களால்
ஏற்படும் தீமையை நினைவில் கொள்ளாதே!
பணத்தைக் காதலி - அதுவே
வாழ்க்கை எனக் கொள்ளாதே!
மனதைக் காதலி
வெளி அழகைப் பார்க்காதே!
நல்லதைக் காதலி
தீயதை அணுகவிடாதே!
காதலை காதலி
கைவிட்டுவிடாதே!
1 comment:
நல்லாத்தானிருக்கு இடையில் தேவையில்லாமல் மெய்ச்சொற்கள் (க் த்)சேர்த்த மாதிரியிருக்கு...நான் சொல்றது பிழையாக்கூட இருக்கலாம்.
Post a Comment