Thursday, October 1, 2009

உண்மை சொல்வாயா..

உன்னோடு ஓடிக்கொண்டிருந்த
நதியாக நான் இருந்த போது
ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது

ஏனோ குளமாக
தேங்கிவிட்டேன்

ஆனாலும்
என்னைச் சுற்றி உன்
நினைவென்னும் குளக்கட்டுகளே

உன்னோடு ஓடியதும்
நானே
உன்னோடு உருண்டதும்
நானே
உன்னோடு விழுந்ததும்
நானே
உன்னோடு கலந்ததும்
நானே

ஆனாலும் நீ
நானில்லாமலே சேர்ந்துவிட்டாய்
வாழ்க்கை எனும் கடலில்

நான் தான் உன்னை நினைத்தே
தேங்விட்டேன் குளமாய்

இருந்தாலும்
யார் வீட்டு குழம்பிலாவது
நீயும் ஒரு நாள் உப்பாகலாம்
நானும் ஒரு நாள் நீராகலாம்

அப்போதாவது
உண்மை சொல்வாயா..? ஏன்
என்னை விட்டு சென்றாயென்று

No comments: