அழகுக்கு ரோஜாவைப் பார் என்பார்
கண்ணுக்கு மீன்களே உறவு என்பார்
நெற்றிக்கு பிறைநுதல் எனப் பெயரிடுவார்
புருவத்திற்கு வில்லைத் துணை தேடுவார்
உதட்டிற்கு கனிகளைக் கட்டி இழுப்பார்
நாசிக்கு தென்படா எள்பூவை வேண்டுவார்
முகத்தை அமாவாசையிலும் ஓர் மதி என்பார்
கால்களுக்கு வாழைத்தண்டை வம்புக்கிழுப்பார்
நடைக்கு அன்னத்தை நோக்கி சுட்டிடுவார்
இவை அனைத்திற்கும், நீ ஒருத்தி போதுமே !
பின் எதற்கு தேவை உதாரணமும், உவமானமும் ?
இதை மறந்துவிட்டு பாரெல்லாம் ஒன்றொன்றாய்த்
தேடிடும் இக்கவிஞர்கள் படும் பாட்டைப் பாராயோ!
No comments:
Post a Comment