Friday, October 30, 2009

காதல் என்பது...

உடலும் மனசும் இலயிக்குமிடம்
எதுவோ அதுதான் காதலோ!
ஏனெனில் காதலின்றி
உடல்செல்லும் பாதையில்
மனம் இலயிப்பதில்லை
மனம்செல்லும் பாதையில்
உடல் இலயிப்பதில்லை
காதலின்றி
பகலும் இரவும் வேறுபாடில்லா
இவ்விரைச்சல் உலகில்
நிசப்தம் மட்டுமே நிலவுகிறது
உரசிசெல்லும் தென்றல்கூட
துக்கம் விசாரிக்கின்றன
காதல் என்பது
எதிர்பாலின ஈர்ப்பு அல்ல
கண்கள் வழி உள்ளங்கள்
பேசும் மொழி அது.
இயற்கையைக் காதலி
காலங்கள் மாறினாலும்
உலகில் நிலைத்து நிற்கும்
கதை சொல்லும் அது.
நல்ல புத்தகங்களைக் காதலி
உற்ற தோழனாய் வெற்றிக்கு
மேற்கோள் காட்டும் அது.
உயிர்களைக் காதலி
மீண்டும் ஓரு
அன்னை தெரசாவாக
மதிக்கபடுவாய் இவ்வுலகில்

No comments: