Saturday, October 24, 2009

நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற!!!

நுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டதால் என் போன்ற திறமையான மாணவர்கள் திறமையை நிருப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது, என்னதான் இருந்தாலும் அதில் அதிக மதிப்பெண் வாங்கும் டெக்னிக்கை மறந்து விடாமல் வாழையடி வாழயாக போற்றி பாதுக்காக்க வேண்டியது எனது கடமை. ஆகையால் இத்தனை நாட்களாக கட்டிகாத்து வந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்.

12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.

நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.

அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.

ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.

ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.


இதன் நன்மைகள்

முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.

No comments: