மு.கு. இது மாணவர்கள் சிரிக்க மட்டும். நிச்சயமாய் சிந்திப்பதற்கு அல்ல, அல்ல, அல்ல. (மாணவர்கள் அல்லாதவர்கள் சிந்தித்தாலும் பாதகமில்லைங்கோ, ஹி ஹி)
1. ஒரு வருடத்தில் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை 365 நாட்கள் மட்டுமே.
2. அதில் 52 நாட்கள் ஓய்வு (ஓய்வு ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம், தெரியும்தானே? ) எடுக்க வேண்டிய ஞாயிறு நாட்கள். அவை போனால், மிகுதியாக இருப்பது 313 நாட்கள்.
3. கோடை விடுமுறை 50 நாட்கள். அப்போது மிகவும் சூடாக இருக்குமாதலால் படிப்பது கஷ்டம். அத்துடன் அவர்கள் ஊர் எல்லாம் சுற்றிப் பார்த்து தமது பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியதும், உற்றார் உறவினருடன் பொழுதைக் கழிக்க வேண்டியதும் அவசியம். மிகுதியாக இருப்பது 263 நாட்கள்.
4. ஒவ்வொருநாளும் 8 மணித்தியால நித்திரை உடலுக்கும் மூளைக்கும் அவசியம். எனவே 8 x 365 = 2920 மணித்தியாலங்கள் நித்திரை வேண்டும். அது கிட்டத்தட்ட 122 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 141 நாட்கள்.
5. உடல்பயிற்சி உடலுக்கு அவசியமென்பதால், கடைசி 1 மணித்தியாலம் ஒவ்வொருநாளும் விளையாட வேண்டும். அது 1 x 365 = 365 மணித்தியாலங்கள் = 15 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 126 நாட்கள்.
6. அமைதியாக, ஆறுதலாக சாப்பிடுவது அவசியம் என்பதால் ஒவ்வொருநாளும் 3 அல்லது 4 வேளை உணவுக்கும், ஒவ்வொருநாளும் 2 மணித்தியாலம். அது 2 x 365 = 730 மணித்தியாலங்கள் = 30 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 96 நாட்கள்.
7. மனிதன் ஒரு சமூக அமைப்பை கொண்டிருப்பதால், ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலமாவது மற்றவர்களுடன் சேர்ந்து, கதைத்து இருக்க வேண்டியது அவசியம். அது 1 x 365 = 365 மணித்தியாலங்கள் = 15 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 81 நாட்கள்.
8. ஒரு வருடத்தில் பரீட்சை வரும் நாட்கள், கிட்டத்தட்ட 35 நாட்கள். மிகுதியாக இருப்பது 46 நாட்கள்.
9. பொது கொண்டாட்டங்கள், பொது விழாக்கள், பொது விடுமுறை நாட்கள் எல்லாமாக கிட்டத்தட்ட 40 நாட்கள். எனவே மிகுதியாக இருப்பது 6 நாட்கள் மட்டுமே.
10. அந்த 6 நாட்களில், வருடத்தில் ஒரு 3 நாட்களாவது ஏதாவது சுகவீனம் வரும் சந்தர்ப்பம் இருப்பதால், மிகுதியாக இருப்பது 3 நாட்கள் மட்டுமே.
11. ஏதாவது படம் பார்க்க, வீட்டில் நடக்கும் ஏதாவது ஸ்பெஷல் விசேஷங்களுக்கு 2 நாட்கள் ஒதுக்கலாம். இப்போது மிகுதியாக இருப்பது 1 ஏ 1 நாள் மட்டுமே.
12. அந்த ஒரு நாள், அவரது பிறந்த நாள்.
பிறகு மாணவர்கள் எப்போது படிப்பதாம்?
No comments:
Post a Comment