Thursday, August 27, 2009

தைரியமாயிரு

அன்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ மண்ணைப்
பார்த்தாய்.

நேற்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ என்னைப்
பார்த்தாய்.

இன்று
நான் உன்னைப்
பார்க்கும் போது
நீ உன்னையே
பார்க்கிறாய்.

பெண்ணே
மிரளாதே
காதலுக்கு
ஜாதி மதம் இல்லை.

நாளை
நான் உன்னைப்
பார்க்கும் போது
தைரியமாக நீ
என்னைப் பார்.

இதுவே வழியென
நாளைய உலகம்
நம்மைப் பார்க்கும்.

No comments: