Friday, August 28, 2009

ஒரு சிங்கத்தை கொல்வது எப்படி.....

ர ஐனிகாந்த்:

1)இதோ அடிக்க போகிறேன். அதோ தாக்க போகிறேன் என்று எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும். சிங்கம் பயத்திலேயே வாழ்ந்து, பயத்திலேயே செத்துவிடும்.
2) இல்லையென்றால் ர ஐனி முகத்திலே போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிடவேண்டும். எடை தாங்காமல் செத்துவிடும்.

கமலஹாசன்:

சிங்கத்தின் அருகே சென்று ஓவென்று கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் சிங்கம் தானே செத்துவிடும்.

ஜெயலலிதா:

இரவு 2 மணிக்கு போலிசை கொண்டு தூங்கிகொண்டிருக்கும் சிங்கத்தை கொல்ல வேண்டியதுதான்.

கருணாநிதி:

முதலில் சிங்கத்தை உடன்பிறப்பாக்க வேண்டும்.ஒரு மாதம் தொடர்ந்து 'சிங்கமே என் உடன்பிறப்பே ' என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து 'சிங்கமே என் உடன்பிறப்பே நீ எனக்காக தற்கொலை பண்ணாதே' என்று கடிதம் வந்ததும் தலைவர் தன்னை தற்கொலை பண்ண சொல்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு சிங்கம் தற்கொலை செய்துகொள்ளும். அவ்வளவுதான்.

மணிரத்னம்:

சிங்கத்துக்கு சூரியவெளிச்சமே காட்டகூடாது. ஒரே ஒரு மெளுகுவர்த்ர்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் குசு குசு என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும். சிங்கம் தானே தற்கொலை செய்து கொள்ளும்.

பாரதிராஜா:

நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அரிவாளால் ஒரே போடு.அவ்வளவுதான். தீர்ந்தது.

சங்கர்:

சிங்கத்தை ஆஸ்திரேலியா-அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிஸ்லான்ட் ஆல்ப்ஸ் மலை செட் போட்டு நல்ல அழகான லொகேஸனில் கொம்பியுட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.

விஜயகாந்த்:

இன்னும் 5 சிங்கங்களை கொண்டு வந்து எல்லாவற்றுடனும் ஓரே நேரத்தில் சண்டை போட்டு 5 சிங்கங்களையும் கொன்று விட வேண்டும்.அதன் பின் பழைய சிங்கத்திடம் உலகத்தில் மொத்தம் 25000 சிங்கம் இருக்கு. அதுல நம்ம நாட்டுல ம்ட்டும் 3000 சிங்கம் இருக்கு. நம்ம தமிழ்நாட்டுல மட்டும்...............சிங்கம் வெறுத்து போயி தானே தற்கொலை பன்னிக்கும்.

ஷாருக்கான்:
அசோகா மாதிரி படம் எடுத்து சிங்கத்திடம் போட்டு கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

No comments: