Thursday, August 27, 2009

சில நிரந்தர விதிகள்..

எதுக்காவது வரிசையிலே நிக்கிறோம்ன்னு வச்சுக்கங்க.. நாம் நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.. மத்த வரிசையெல்லாம் கிடு கிடுன்னு கரையும்.. கவனிச்சிருக்கீங்களா..?

*****************************************************************

தப்பா நம்பர் அடிச்சு போன் பண்ணினோம்ன்னு வைங்க.. எங்கேஜ்டா இருக்காது.. தப்பு நம்பர் எதிராளி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பான்.. லொடக்குன்னு 2 ரூபா காலியாயிடும்..!

*****************************************************************

பைக்கையோ காரையோ தெரிஞ்சவரைக்கும் ரிப்பேர் பார்த்துட்டு, கையை ஆயிலாவோ, கிரீஸாவோ வச்சுருக்கோம்ன்னு வைங்க.. அப்பத்தான் மூக்கு அரிக்கும்.. உண்டா இல்லையா..?

*****************************************************************

உங்க முதலாளி ஏன் லேட் ன்னு கேட்டு வண்டி பஞ்சர் ன்னு சொல்லி சமாளிச்சுடுவீங்க.. சோதனையா மறுநாள் உண்மையாவே பஞ்சர் ஆகி முதலாளிக்கிட்டே பேய் முழி முழிச்சுருக்கீங்களா இல்லையா..?

*****************************************************************

வீட்டை பூட்டிட்டு வெளிலே கெளம்பும்போது தொலைபேசி ஒலிக்கும்.. திறந்து உள்ளே வர்றதுக்குள்ள நின்னு போயிடும்..

*****************************************************************

ஒரு முக்கியமான ஆளு அவங்கூட சேராதே ன்னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் சின்சியரா சரின்னுருப்பீங்க.. மறுநாளே அவ்னோட சுத்தறத அந்த முக்கியமானவங்க பாத்துடுவாங்க.. வாசஸ்தவம் தானே..?

*****************************************************************

ஒரு மேஜிக்'கையோ, இல்லே வேறே எதாவது வித்தையையோ கத்துட்டு வந்துருப்பீங்க. ஒரு ஆள அசத்தணும்ன்னு அதை செஞ்சு காமிக்கறப்போ சொதப்பிடும்.. அவங்க போனப்புறம் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க.. கரெக்டா வரும்.. அப்படி நொந்து நூலாயிருக்கீங்களா இல்லையா..?

*****************************************************************

கொட்டாவி விட்டுட்டு வெட்டியா உக்காந்து இருப்பீங்க.. ஒரு வேலையும் இருக்காது.. ஒரு டீ சாப்பிடலாம்ன்னு கப்பை கையிலே எடுப்பீங்க.. உடனே ஒரு வேலை வானத்துலேருந்து குதிக்கும்.. சூடா அந்த டீயை குடிக்க விடாமப் பண்ணிடும்.. அனுபவிச்சுருக்கீங்களா..?

---------------------------------------------------

No comments: