Thursday, August 27, 2009

அட சிரிங்கப்பா

கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.

ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!

டிரைவர் :..............###???



நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

கோபு: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"



கோபு: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.

டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?

கோபு: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!



கோபு தன்னோட பைக்கில் மூன்று நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க....டென்ஷனான கோபு: "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"



கோபு: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன்.

நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

கோபு: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன் !

No comments: